Back to top

Sabbath Bible Lessons

நற்செய்தியின்படி யோவான் – பகுதி 1

 <<    >> 

முன்னுரை

இந்த ஆண்டு, யோவான் சுவிசேஷம் குறித்து நான்கு காலாண்டு இதழ்களை ஆராய்வோம். தன்னடக்கத்தின் காரணமாக, நான்காவது சுவிசேஷத்தின் ஆசிரியர் தன்னை அடையாளம் காட்டவில்லை, அல்லது இயேசுவை முதலில் பின்பற்றிய இரண்டு சீடர்களில் ஒருவராக தன்னை குறிப்பிடவில்லை (யோவான் 1:37). மாறாக, "வேறொரு சீஷனை," "அந்தச் சீஷனை," "சீஷனை . . . அவர் நேசித்தவர், "இயேசு அன்புகூர்ந்த சீஷன்," "இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுக்கிற சீஷன்" (யோவான் 18:15; 19:26; 21:20, 23, 24). யோவானின் பெயர் விட்டுவிட்டு, மற்ற முக்கிய சீஷர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது, அவரே அந்த சுவிசேஷத்தை எழுதியிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

தீர்க்கதரிசன ஆவியின் படி, நான்காவது சுவிசேஷத்தின் ஆசிரியர் யோவான், "இயேசு நேசித்த சீஷன்." அவர் கைதுசெய்யப்படுவதற்கு சற்று முன்பு மறுரூப மலையில் கிறிஸ்துவின் மகிமையையும், தோட்டத்தில் அவரது வேதனையையும் கண்ட மூன்று சீடர்களில் இவரும் ஒருவர். கடவுளுடைய வல்லமை ஒரு "இடிமுழக்கத்தின் மகனை" அன்பான மனநிலையும் ஆழ்ந்த ஆவிக்குரிய உட்பார்வையும் கொண்ட மனிதனாக எவ்வாறு முழுமையாக மாற்ற முடியும் என்பதற்கு அவருடைய வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

"கம்பீரமான தூணில் திராட்சைக் கொடி பற்றிக்கொண்டிருப்பது போல யோவான் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டார். தனது எஜமானுக்காக அவர் நியாயத்தீர்ப்பு மண்டபத்தின் ஆபத்துகளைத் துணிச்சலுடன் எதிர்த்து, சிலுவையைச் சுற்றி நின்றார், கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைக் கேட்டதும், அவர் கல்லறைக்கு விரைந்தார், தனது வைராக்கியத்துடன், மூர்க்கத்தனமான பேதுருவையும் விஞ்சினார்.

"யோவானின் வாழ்க்கையிலும் குணாதிசயத்திலும் வெளிப்பட்ட நம்பிக்கையான அன்பும் சுயநலமற்ற பக்தியும் கிறிஸ்தவ திருச்சபைக்கு சொல்லமுடியாத மதிப்புள்ள பாடங்களை வழங்குகின்றன. பிற்கால அனுபவம் வெளிப்படுத்திய குணாதிசயத்தின் அழகு யோவானிடம் இயல்பாக இல்லை. இயல்பிலேயே அவரிடம் கடுமையான குறைபாடுகள் இருந்தன. அவர் கர்வமுள்ளவராகவும், தன்னம்பிக்கை மிக்கவராகவும், கௌரவத்திற்காக பேரவா கொண்டவராகவும் இருந்தது மட்டுமல்லாமல், காயத்தின் போது மூர்க்கத்தனமானவராகவும், கோபக்காரராகவும் இருந்தார். அவரும் அவரது சகோதரரும் 'இடிமுழக்கத்தின் மகன்கள்' என்று அழைக்கப்பட்டனர். தீய குணம், பழிவாங்கும் எண்ணம், விமர்சன மனப்பான்மை எல்லாம் அந்த அன்பான சீடனிடம் இருந்தன. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் கீழ் தெய்வீக ஆசிரியர் ஆர்வமான, நேர்மையான, அன்பான இதயத்தை அடையாளம் கண்டார். இயேசு இந்த சுயநலத்தை கண்டித்தார், அவரது லட்சியங்களை ஏமாற்றினார், அவரது விசுவாசத்தை சோதித்தார். ஆனால் அவனுடைய ஆத்துமா ஏங்கியதையும் - பரிசுத்தத்தின் அழகு, மற்றும் அன்பின் புதுப்பிக்கும் வல்லமையை அவர் அவனுக்கு வெறிப்படுத்தினார்." — The Acts of the Apostles, pp. 539, 540.

யோவானின் சுவிசேஷம் கி.பி 90 அல்லது அதற்கு முன்னர் எபேசுவில் எழுதப்பட்டது என்று பண்டைய அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். அந்தச் சீஷன் கொதிக்கும் தைலக் கொப்பரையில் போடப்பட்டு, அற்புதமாய் மரணத்திலிருந்து தப்பப்பட்டு, பின்பு பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட்டான் (வெளி 1:9). அங்கு அவர் வெளிப்படுத்துதலை எழுதினார். நெர்வா அரியணை ஏறியது (கி.பி. 96) அவர் எபேசஸுக்குத் திரும்புவதை சாத்தியமாக்கியது, அங்கு அவர் ற்ராஜன்(Trajan) ஆட்சியின் போது (கி.பி. 98-117) இறக்கும் வரை தொடர்ந்து வசித்து வந்தார் என்று நம்பப்படுகிறது.

கிறிஸ்துவின் ஆவியானவர் இந்த காலாண்டில் நமது படிப்பை வழிநடத்தி, அவருடைய அன்புக்கு பதிலளிக்கும் விதமாக நம் இருதயங்களைத் தொடுவாராக!

ஜி. சி. ஓய்வுநாள் பள்ளி துறை

 <<    >>